உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – விசாரிக்க ஆணைக்குழு [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தாம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவ உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் நேற்று(19) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் உருவாகிய நாள் முதல், பாதுகாப்புக்கு எவ்வித முன்னுரிமையும் வழங்கவில்லை.

குண்டுத் தாக்குதல் நடத்துபவர்கள் தொடர்பான தகவல்கள் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டிருந்தபோதும், அதனைத் தடுப்பதற்கு அவர்களால் முடியாது போனதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தங்களது அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், புலனாய்வுத் துறையினருக்கு அவசியமான அதிகாரங்களையும், சட்டத்தில் பாதுகாப்பையும் வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதேநேரம், அடிப்படைவாதம், தீவிரவாதம் மீண்டும் உருவாகாத வகையில் நாட்டை மீண்டும் பாதுகாப்பான நாடாக மாற்ற உள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.