தேசிய மக்கள் சக்தி முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய மக்கள் சக்தி முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளது.

1 – 5 வருடங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பளம் நிறுத்தப்படும்.

2 – முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவர்களது மனைவிமாரது தேவைகள் பொதுமக்கள் பணத்தினால் முன்னெடுக்கப்படுவது நிறுத்தப்படும்.

3 – அமைச்சரவை 30 ஆக குறைக்கப்படும் (அமைச்சர்கள் 30 பிரதி அமைச்சர்கள் 30)

4 – அமைச்சரவை அந்தஸ்துள்ள மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற என அமைச்சுப் பதவிகளால் வேறுபாடுகள் இருக்காது.

5 – இந்நாட்டிற்கு ஒத்துப்போகாத பாராளுமன்ற உறுப்பினர்களது வாகனங்களது வாகன அனுமதிப்பத்திரம் நிருத்தபப்டும்.