பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது.

புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை  கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.