இரு வாரங்களுக்கு பொதுக் கூட்டங்களுக்கு தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 எனும் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க எதிர்வரும் இரு வாரங்களுக்கு பொதுக் கூட்டங்களை நடாத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த உயிர் அச்சுறுத்தல் மிக்க வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பதுவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.