பொதுப் போக்குவரத்து தொடர்பில் விசேட அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளைய தினம்(11) ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் அரச மற்றும் தனியார் சேவையாளர்களுக்கு மாத்திரமே பொதுப் போக்குவரத்து சேவை வழங்கப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், நாளை(11) முதல் இரண்டு வாரங்களுக்கு பொதுமக்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்க வேண்டாம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களினதும் செயற்பாடுகளை நாளை(11) முதல் பகுதியளவில் வழமைக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையிலேயே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அரச மற்றும் தனியார் சேவையாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.