(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு எதிர்வரும் நான்கு நாட்கள் மிகவும் அவதானமாக இருக்கும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு இன்று(16) காலை வழங்கிய நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
குறித்த காலப்பகுதிகளில் மக்கள் வெளியே நடமாடுவதாயின் கண்டிப்பாக முகக்கவசத்தை அணிந்தே செல்ல வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியிறுந்தார்.