ETI நிறுவனத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் காரணமாக வோர்ட் பிளேஸ் வீதியில் போக்குவரத்து தடை…

கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதியின் பொரள்ளை நோக்கிய பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேசத்தில் ஈ.டி.ஐ. (ETI) நிறுவனத்தில் பண வைப்புச் செய்தவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாகவே அந்த வீதி மூடப்பட்டுள்ளது.

ஈ.டி.ஐ. பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் பண வைப்புச் செய்தவர்கள் தமது வைப்புப் பணத்தை மீள வழங்குமாறு கோரி அந்நிறுவனத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.