தமிழ் மக்களுக்கு உரிய தீர்வின்றேல் தீர்வினை நாம் பெற்றுக் கொள்ள தயங்கவும் மாட்டோம் – சம்பந்தன்…

தமிழ் மக்களுக்கு உரிய தீர்வின்றேல் தீர்வினை நாம் பெற்றுக் கொள்ள தயங்கவும் மாட்டோம் – சம்பந்தன்…

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தமிழ் மக்கள் தமக்கான வழியை வகுத்துக் கொள்வார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தமிழ் சங்கத்தில் நேற்று(24) நடைபெற்ற இந்திய பத்திரிகையாளர் தி.ராமகிருஷ்ணனின் ‘ஓர் இனப்பிரச்சினையும், ஓர் ஒப்பந்தமும்’ என்ற நூல் அறி முக விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்; ” நாட்டைப் பிரிப்பது எமது நோக்கம் அல்ல. ஒருமித்த நாட்டுக்குள் நாங்கள் தனித்த ரீதியில் வாழ்ந்த பகுதிகளில் அதியுட்ச அதிகூடிய அதிகார பகிர்வு மூலமாக எமது உள்ளக சுய உரிமை அங்கீகரிக்கப்பட்டு நாங்கள் மரியாதையாக, சுய மரியாதையுடன் மதிப்பாக வாழ வேண்டும் என்பதே எங்களது கொள்கை.

1987ஆம் ஆண்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது. இந்த கடமையிலிருந்து இந்தியா விலக முடியாது.
எமது நாட்டுக்குள், எமது மக்களுடன் பேசி நாங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒர் தீர்வை நாங்கள் ஏற்படுத்த விரும்புகின்றோம். அதற்கான தீர்வு கிடைக்காவிட்டால். எமக்கு நியாயமான தீர்வு கிடைக்க எது செய்ய வேண்டுமே, அதை செய்ய நாங்கள் தயங்க மாட்டோம்..” என கூறியிருந்தார்.