உங்க நகமும் அழகா இருக்கணுமா? எலுமிச்சையை ட்ரை பண்ணி பாருங்க…

உங்க நகமும் அழகா இருக்கணுமா? எலுமிச்சையை ட்ரை பண்ணி பாருங்க…

நகத்தை வலுப்படுத்தவும் உடையாமல் தடுக்கவும் பல்வேறு பொருட்களும் வந்துவிட்டன. நகங்கள் வலுவில்லாமல் இருக்க ஒரு காரணம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாக கிடைப்பதே.

நீங்கள் மெனிக்யூர் போன்றவற்றை செய்து வந்தாலும் நகத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை பெற பிற கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது.

பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு நகங்களை வலுப்படுத்தவும் அழகாக்கவும் முடியும். பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு தயாரித்த இந்த இயற்கை மருந்து நகம் வளரும் போது பிரிவு ஏற்பட்டால், நகத்தின் நிலையை மேம்படுத்த உதவும். இது அவசியமான ஊட்டச்சத்துக்களை ஒருங்கிணைத்து இதன்மூலம் நகத்தின் மேல் பகுதியை வலுப்படுத்த உதவுகிறது.

வீட்டில் பராமரிக்கும் வழிமுறை:
நம்முடைய வீட்டிலேயே நகங்களை அழகாகப் பராமரித்துக் கொள்ள முடியும். அதற்குத் தேவைப்படும் பொருட்கள் எல்லாம் நம்முடைய வீட்டிலேயே கிடைக்கக்கூடிய, எளிதில் வாங்கக் கூடியதாக இருக்கும். மேலும் இதில் பின் விளைவுகள் எதுவும் இருக்காது. இதை நீங்கள் மென்மையான நகங்களிலும் பயன்படுத்தலாம்.

தேவையானவை:
2 பூண்டு பல்
2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
1 விட்டமின் E கேப்ஸுல்
1 பாட்டில் கிலேயர் நெயில் பாலிஷ்

செய்முறை:
பூண்டு பல்லை நசுக்கி அதில் எலுமிச்சை சாறு மற்றும் விட்டமின் E கேப்ஸுல் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். 15 – 20 நிமிடம் கழித்து இந்த கலவையை கிலேயர் நெயில் பாலிஷில் கலந்து வைத்துக் கொள்ளவும். உங்கள் நகத்தில் இருக்கும் நெயில் பாலிஷை நீக்கி, கையை கழுவி, நகத்தின் மீது செய்து வாய்த்த கலவையை போடவும். போடும் போது முழு நகத்திலும் போடவும். சில மணிநேரம் கழித்து இதை நீக்கவும். இதை தினசரி செய்து வர உங்கள் நகம் வலுவாகவும் விரைவாகவும் வளரும்.

வேறு சில வழிமுறைகள்:
மென்மையான நகங்களுக்கு இந்த வீட்டு வைத்தியம் ஒரு பயனுள்ள தீர்வாக அமையும். நகம் உடையாமல் இருக்கவும் நிறம் மாறாமல் இருக்கவும் சில பழக்கங்கள் அவசியமாக உள்ளது.

தினசரி குறைந்தபட்சம் 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவும் கெமிக்கல் சம்பந்தமான பொருளை சுத்தம் செய்யும் போது கையுறை பயன்படுத்துவது நல்லது. நகங்களின் மேற்பரப்பில் மற்றும் வெட்டுக்காயங்கள் போன்ற இடத்தில் தினசரி நீரேற்றம் தேவை.

தவிர்க்க வேண்டியவை:
நகம் கடிப்பதை தவிர்க்கவும் நகத்தை கருவிகளாக பயன்படுத்த கூடாது க்யூட்டிக்கேல் வெட்டுவது கெமிக்கல் நிறைந்த காஸ்மெட்டிக் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது நகம் அழுக்காக இருக்க கூடாது