உலகிலேயே அசிங்கமான நாய் பட்டத்தினை வென்ற சீசா.. (photos)

உலகிலேயே அசிங்கமான நாய் பட்டத்தினை வென்ற சீசா.. (photos)

அமெரிக்காவில் நடைபெற்ற உலகின் மிக அழகற்ற நாய் போட்டியில் இங்கிலீஷ் புல்டாக் (English bulldog) வகையைச் சேர்ந்த சீசா சீசா வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெடலுமா நகரில் ஆண்டுதோறும் அழகற்ற நாய்களுக்கான போட்டி நடைபெறும்.
இப்போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வித்தியாசமான நாய்கள் பங்குபெறும். அருவருப்பான தோற்றம் கொண்ட நாய்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவும். அதில் மிகவும் அசிங்கமான நாயை நடுவர்கள் தேர்வு செய்வார்கள்.

இந்நிலையில். இந்த வருடம் நடைபெற்ற உலக அழகற்ற நாய்களுக்கான போட்டியில் அமெரிக்காவின் மிசோரியைச் சேர்ந்த நாய் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது.

இங்கிலீஷ் புல்டாக் வகையைச் சேர்ந்த இந்த நாய் பார்ப்பதற்கு மிகவும் அருவருப்பான தோற்றத்தை கொண்டுள்ளது. சீசா சீசா என்ற பெயர் கொண்ட நாயின் நாக்கை பார்ப்பதற்கு மிகவும் அழகற்றதாக காணப்படும்.

சீசா சீசாவிற்கு வெற்றி கோப்பையுடன் ஆயிரத்து ஐநூறு டாலர் பரிசுத் தொகையும், அத்துடன் நியூயார்க்கில் நடைபெறும் என்.பி.சி. டுடே ஷோ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்தா என்ற நாய் வெற்றி பெற்றது.

 

Image result for english bulldog zsa zsa

Image result for english bulldog zsa zsa

Image result for english bulldog zsa zsa