இரண்டாவது போட்டிக்கு முன்னர் அகில மற்றும் மாலிங்க குறித்து ரோய் விசேட கருத்து…

இரண்டாவது போட்டிக்கு முன்னர் அகில மற்றும் மாலிங்க குறித்து ரோய் விசேட கருத்து…

வலைப் பயிற்சியின் போது பந்தினை அடித்து பயிற்சி பெறுவதனை விட, சுழற் பந்து வீச்சாளர்களது பந்தினை அடிப்பது அவசியம் எனவும், எவ்வித பந்து வீச்சாளர்களாயினும் பந்துக்கு முகங்கொடுக்க அணி தயார் நிலையில் உள்ளதாக இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இலங்கை அணியுடன் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 27 பந்துகளுக்கு 24 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் விளாசிய பந்தானது சதீர சமரவீர கைப்பிடிப்பில் ஆட்டமிழந்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்;

முதல் 10 ஓவரில் சுழற் பந்து வீச்சாளர்களின் பந்துகளுக்கு முகங்கொடுக்கும் வரையில் ஓரளவு சவாலாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அவ்வாறே, லசித் மாலிங்கவிடம் இருந்து வரும் பந்துகள் ஒவ்வொரு கோணல்களிலும் கூடிய வித்தியாசமான வீச்சுக்கள் எனவும், அவரது வேகங் குறைந்த பந்துகளுக்கு முகங் கொடுப்பது சில சமயம் சவாலாகவே உள்ளது எனவும் மேலும் தெரிவித்திருந்தார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை(13) தம்புள்ளை மைதானத்தில் பகல்/இரவாக நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.