மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம்…

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம்…

மாலைத்தீவு தேர்தல் வெற்றியை எதிர்த்து உச்ச நீதிமன்றில் முன்னாள் ஜனாதிபதி மனு செய்துள்ளதை அடுத்து அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மாலைத்தீவில் சமீபத்தில் ஜனாதிபதி தேர்ததில் போட்டியிட்ட ஜனாதிபதி அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார்.

அதை யாமீன் ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்தலில் முறைகேடு நடத்தி வெற்றி பெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை மாலைத்தீவு தேர்தல் கமி‌ஷன் மறுத்துள்ளது.

அதற்கு மாறாக தேர்தல் வெற்றியை எதிர்த்து மாலைத்தீவு உச்ச நீதிமன்றில் அவர் மனு செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாலே நகரில் நேற்று நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதி அப்துல்லா யாமீனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்