கல்வியமைச்சர் அகில’வுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்  முறைப்பாடு….

கல்வியமைச்சர் அகில’வுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு….

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்துக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று(16), முறைப்பாடொன்றை பதிவு செய்யவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

பாவிக்க உகந்த நிலையில் இலாத இத்துப்போகும் தருவாயில் இருந்த பாடசாலை சீருடைகளுக்காக, திறைசேரியில் 2,372 மில்லியன் ரூபாயை மோசடி செய்தார் என குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில், குறித்த இந்த முறைப்பாட்டை செய்யவுள்ளதாக, மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.