பேருவளை குடு’வுடன் தொடர்பு என முகநூலினூடாக பொய்ப் பிரச்சாரம் செய்தோருக்கு பிழைத்தது.. Screenshot உடன் CID இல் முறைப்பாடு..!!!

பேருவளை குடு’வுடன் தொடர்பு என முகநூலினூடாக பொய்ப் பிரச்சாரம் செய்தோருக்கு பிழைத்தது.. Screenshot உடன் CID இல் முறைப்பாடு..!!!

அண்மையில் பேருவளை பிரதேசத்தில் வைத்து பாரிய தொகையுடன் கூடிய ஹெரோயின் போதைப் பொருட்கள் தொடர்பில் கைதாகிய இரண்டு சிங்கள நபர்கள் மற்றும் ஒரு முஸ்லிம் நபரான முஹம்மத் ரிஸ்வான் எனப்படும் சந்தேக நபர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முகநூலினூடாக உண்மைக்கு புறம்பான செய்திகள் பரிமாறப்படுவதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, சில முகநூல் பக்கங்கள் ஊடாகவும் சமூக இணையத் தளங்கள் ஊடாகவும் குறித்த போதைப் பொருளானது அரசியல் ஆதரவுடன் கொண்டு வரப்பட்டதாக பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளதோடு, இதற்கு முன்னாள் பேருவளை பிரதேச சபைத் தலைவரான, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் மில்பர் கபூர் தொடர்பு பட்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றது. அதற்கு பேருவளையினை சேர்ந்த முஹம்மத் நஜ்மி என்பவர், மில்பர் கபூர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படமானது வைரலாக பரவி வருகின்றது.

எவ்வாறாயினும் தனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் தொடர்பில் நேற்று(11) கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்து தகுந்த ஆதாரங்களையும் முன்வைத்ததாக பாதிக்கப்ப நஜ்மி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.