சூப்பரான சீஸ் கட்லட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்..

சூப்பரான சீஸ் கட்லட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்..

சீஸ், உருளைக்கிழங்கு இரண்டையும் வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்

தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு – 2,
வெங்காயம், கேரட் – தலா ஒன்று,
சீஸ் – 4 க்யூப்ஸ்,
கோஸ் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்,
பிரெட் தூள் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் கேரட்டை துருவிக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், மசித்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், கோஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலாத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

இந்த மசாலா ஆறியதும் அதனுடன் துருவிய சீஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த மசாலாவை வட்டமாக தட்டி, பிரெட் தூளில் புரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

சூப்பரான சீஸ் வெஜிடபிள் கட்லெட் ரெடி.