சுமார் 24 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானத்துக்குத் தற்காலிகமாகத் தடை

சுமார் 24 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானத்துக்குத் தற்காலிகமாகத் தடை

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஓமான்) – கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் சுமார் 24 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானத்துக்கு ஓமான் அரசு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து ஓமன் அரசு வெளியிட்ட அறிவிப்பில்;

கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு சுமார் 24 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானத்துக்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரை இந்தத் தடை தொடரும்.

பயணிகள் விமானம் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளின் விவரங்கள்:

பிரிட்டன், துனிசியா, லெபனான், ஈரான், இராக், லிபியா, புருனே, சிங்கப்பூர், இந்தோனேசியா, கினியா, கொலம்பியா, எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ், சூடான், தான்சானியா, தென் ஆப்பிரிக்கா, கானா, நைஜீரியா, கொலம்பியா, அர்ஜெண்டினா, சியரா லியோன், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம்”.

இவ்வாறு ஓமான் அரசு தெரிவித்துள்ளது.

ஓமானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,675 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,80,235 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,356 பேர் பலியாகி உள்ளனர்.