நடுவரை தள்ளிவிட்ட கம்பீருக்கு தடை விதிக்கப்படுமா?

நடுவரை தள்ளிவிட்ட கம்பீருக்கு தடை விதிக்கப்படுமா?

கோப்பை போட்டியில் டெல்லி- மேற்கு வங்கம் இடையோன ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடை பெற்று வருகிறது. மேற்கு வங்கம் பேட் செய்தபோது 7.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்தது. சாரதி பட்டாச்சார்ஜி விக்கெட் விழுந்ததை தொடர்ந்து கெப்டன் மனோஜ் திவாரி களமிறங்கினார்.

தொப்பி அணிந்தபடி அவர் பேட் செய்ய வந்தார். வேகப்பந்து வீச்சாளர் மனன் ஷர்மா ஓடிவர ஆரம்பித்தபோது திடீரென கை நீட்டி தடுத்து நிறுத்திய திவாரி டிரஸ்சிங் அறையை நோக்கி தனக்கு ஹெல்மெட் வேண்டும் என்று சைகை செய்தார். திவாரி வேண்டுமென்றே நேரத்தை கடத்த முற்சி செய்வதாக டெல்லி வீரர்கள் கருதினர்.

ஸ்லிப் பகுதியில் நின்றுகொண்டிருந்த டெல்லி கெப்டன் கம்பீர், திவாரியின் அருகே வந்து நேரத்தை கடத்த இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதா எனக்கூறி திட்ட ஆரம்பித்தார். ‘மாலையில் வெளியே வருவல்ல.. அப்போது என் கையால் அடிபடுவாய்’ என்று கம்பீர் கூறியதாக தெரிகிறது. இதை கேட்டு கோபமடைந்த திவாரி, ‘எதற்கு, மாலை வரை காத்திருக்கனும். இப்போதே வெளியே போய் செட்டில் செய்து விட்டு வருவோம்’ என்று சத்தம் போட்டுள்ளார்.

இதைப்பார்த்த நடுவர் ஸ்ரீநாத் இருவரையும் சமாதானம் செய்தார். அப்போது நடுவரை கம்பீர் கீழே தள்ளினார். மேலும் திவாரியுடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்தார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவழியாக சிறிது நேரத்தில் வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு, இரு வீரர்களுக்கும் போட்டி ரெப்ரி வால்மிக் பச், சம்மன் அனுப்பியுள்ளார். நடுவரை தள்ளிவிடுவது விதி முறைப்படி தவறாகும். இதனால் கம்பீருக்கு தடை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.