லசந்த கொலையில் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கெதிராக குற்றச்சாட்டு

லசந்த கொலையில் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கெதிராக குற்றச்சாட்டு

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த பொலிஸ் மா அதிபரிடம் உடனடியாக வாக்கு மூலம் பதிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்னும்,இக்குறித்த கொலை தொடர்பான சாட்சியங்களை அழித்ததாக பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லசந்த கொலை தொடர்பில் கொலை இடம்பெற்ற இடத்திலிருந்து மீட்கப்பட்ட லசந்தவின் குறிப்புப் புத்தகத்தை காணாமல் போகச் செய்தமை மற்றும், சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரியின் அறிக்கையை அகற்றிக் கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியுள்ளது குறித்த பொலிஸ் மா அதிபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவரை விடுதலை செய்யவும் இந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் அழுத்தம் கொடுத்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, லசந்த கொலையுடன் கோதபாயவிற்கு தொடர்பு உண்டு என்ற முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் கருத்து சரியானதே என அண்மையில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார் என சகஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.