பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் மனைவியின் மாமாவான குமாரசிறி மதுரபெருமவின் மர்மமான மரணம் தொடர்பிலிலேயே அவருடைய மனைவி சந்திரா நந்தானி என்பவரால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் சட்டத்தரணி ஊடாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

55 மில்லியன் ரூபா சொத்துக்களுக்கு உரிமையாளரான குமாரசிறி மதுரபெரும கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக உயிரிழந்திருந்தார்.

அவருடைய சொத்துக்கள் அனைத்தும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மனைவியின் பெயருக்கு எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அவருடை மரணத்தில் மர்மம் தொடர்வதாக மதுரபெரும மனைவியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குமாரசிறி மதுரபெரும சுகயீனமுற்று இருந்த போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் மனைவியினால் அருகில் இருந்த பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லாமல் 17 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பல மணித்தியாலங்களின் பின்னரே மதுரபெரும உயிரிழந்துள்ளார்.

இதனை மதுரபெருவின் மனைவி சந்திரா நந்தானிக்கு அறிவிக்காமல், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குண­சே­கரவுக்கு அறிவித்து விட்டு உடலை தனியாக லயனல் மலர்சாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் மனைவி.

இதனையடுத்து பிரேத பரிசோதனைக்கு தேவையான அனைத்து பாகங்களும் அகற்றப்பட்ட பின்னர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார் என குமாரசிறி மதுரபெருமவின் மனைவி சந்திரா நந்தானி தெரிவித்துள்ளார்.