இலங்கையில் மீண்டும் லொக்டவுனா! வெளியான பகிர் தகவல்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வோர், தங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக ஒரு தற்காலிக முடக்கத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த விடயத்தை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. எனினும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வெளியே பாரிய வரிசைகள் காணப்படுவதால் அத்தியாவசிய சேவைகளால் எரிபொருளைப் பெற முடியவில்லை.

அத்துடன் ஜூலை 10 ஆம் திகதிக்கு பின்னர் புதிய எரிபொருள் கையிருப்பு நாட்டிற்கு வரும் வரை நிலைமை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.