இரண்டு வாரங்களில் மருந்து தட்டுப்பாடு முடிவுக்கு வரும்: கெஹலிய

இரண்டு வாரங்களில் மருந்து தட்டுப்பாடு முடிவுக்கு வரும்: கெஹலிய

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையில் இன்னும் இரண்டு வாரங்களில் மருந்து தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பற்றாக்குறையாக இருந்த 151 மருந்துகளில் 81 மருந்துகளை கடந்த வியாழக்கிழமைக்குள் கொள்வனவு செய்ய முடிந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கான நிதியை ஒதுக்கிய பிறகு செலவீனங்களைப் பொறுத்தவரை நிதி அமைச்சு சுகாதாரத் துறைக்கு முன்னுரிமை அளித்துள்ளது, என்று அவர் கூறினார்.

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படுவதில் எந்த உண்மையும் இல்லை, ஏனெனில் அனைத்து அவசர அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அதே நேரத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சைகள் போன்ற அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.