அரச ஊழியர்களுக்கு நிவாரண விலையில் பொருட்கள் – அமைச்சர் ரிஷாத்

அரச ஊழியர்களுக்கு நிவாரண விலையில் பொருட்கள் – அமைச்சர் ரிஷாத்

சதொச விற்பனை நிலையங்களில் அரச ஊழியர்களுக்கு நிவாரண விலையில் பொருள் கொள்வனவு செய்ய திட்டங்கள் வரையப்படும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இரத்மலானை சதொச நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நட்டத்தில் இயங்கிய நிறுவனமாக கடந்த காலங்களில் கருதப்பட்ட சதொச நிறுவனத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு விசேட செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியாகும் போது இலாபம் பெறும் நிறுவனமாக கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அரச ஊழியர்களுக்கு நிவாரண விலையில் பொருட்கொள்வனவுக்கு நடவடிக்கை செய்துகொடுப்பதோடு இராணுவ முகாம்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிபானங்களை சதொச ஊடகம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 310 ஆக காணப்படுகின்ற சதொச கிளை வலையமைப்பை இந்த வருட இறுதிக்குள் 500 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.