சபாநாயகருக்கு எதிராக  நம்பிக்கையில்லா பிரேரணை

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்மிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களினால் குறித்த இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

சபாநாயகர், நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது வேண்டுமென்றே கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு அநீதி இழைத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனடிப்படையில் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கூட்டு எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர், வார இறுதி செய்தித்தாள் ஒன்றிற்கு  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்…

அண்மையில் நாடாளுமன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போதும், கூட்டு எதிர்க்கட்சியினர் தமது கருத்துக்களை முன்வைக்க இடமளிக்கப்படவில்லை.

மாறாக கூட்டு எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் சரத் பொன்சேகாவிற்கு உரையாற்ற சந்தர்ப்பம் அளித்து அது மோதலாக முடிய சபாநாயகர் வழியமைத்தார்.

இதன் அடிப்படையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்காக கையொப்பங்கள் திரட்டப்பட்டு வருவதாக குறித்த  கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.