பின்லேடனின் மரண சான்றிதழை அமெரிக்காவிடமிருந்து கோரிய மகன்

பின்லேடனின் மரண சான்றிதழை அமெரிக்காவிடமிருந்து கோரிய மகன்

சர்வதேச நாடுகளை அச்சுறுத்திய அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவர் பின்லேடன் அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து அமெரிக்காவிடம் அவரது மகன் அப்துல்லா பின்லேடன் இறப்பு சான்றிதழ் கேட்டு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

மேலும் இக்கடிதத்தை அவர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பியுள்ளார். அதற்கு சவுதி அரேபியாவுக்கான அமெரிக்க தூதர் கிளன் கீசர் பின்லேடன் மகன் அப்துல்லாவுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில்;

”உங்களது தந்தை பின்லேடனின் இறப்பு சான்றிதழ் கேட்டு அனுப்பிய கடிதம் கிடைத்தது.

அமெரிக்க வெளியுறவு சட்டநிபுணர்கள் இது போன்ற ஆவணங்கள் வழங்க கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். ராணுவ நடவடிக்கையின் போது இது போன்ற தனிநபர் கொலைகள் வழக்கமானது தான். பின்லேடன் கொல்லப்பட்டதன் மூலம் அவர் மீதான குற்ற வழக்குகள் கைவிடப்பட்டன.

இந்த ஆவணம் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் சமீபத்தில் விக்கி லீக் இணைய 70 ஆயிரம் ஆவணங்களில் ஒன்றாகும். இனி வரும் வாரங்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சக ஆவணங்களை வெளியிட போவதாக விக்கி லீக் அறிவித்துள்து.

பின்லேடன் சவுதி அரேபியாவை சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர் வர்த்தகர்கள் ஆவர். அல் கொய்தா தீவிரவாத இயக்க தலைவரானதும் கடந்த 1994–ம் ஆண்டில் பின்லேடன் குடியுரிமையை சவுதி அரேபியா ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.