டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரிப்பதனால் பாதகமான பொருளாதார சூழ்நிலை..

டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரிப்பதனால் பாதகமான பொருளாதார சூழ்நிலை..

இலங்கை ரூபாயுடன் ஒப்பிடும் போது டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரிப்பதனால் பாதகமான பொருளாதார சூழ்நிலைகள் ஏற்படக் கூடும் என துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி தற்போது வரையில் 155 ரூபாவை கடந்துள்ளது.

நேற்று(13) அமெரிக்க டொலரின் விற்பனை விலை 155.44 ரூபாயாக பதிவாகியுள்ளது. இதனால் டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக புள்ளி விபரத் தகவல்கள் உறுதி செய்துள்ளன.

இந்த நிலைமை காரணமாக பணவீக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

(rizmira)