பல்கலைக்கழகங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டம்…

பல்கலைக்கழகங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டம்…

பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை பீடத்தின் பணியாளர்களுக்கான உத்தியோகபூர்வ வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை 2018-2019 காலப்பிரிவினுள் 380 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் அமைப்பது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் கல்விப் பிரிவினை விரிவுபடுத்தல்.
அநுராதபுரம், இலங்கை பிக்குமார் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்ற வெளிநாட்டு பிக்குகளுக்காக வேண்டி இரு மாடிகளைக் கொண்ட விடுதி ஒன்றை நிர்மாணித்தல் மற்றும் அப்பல்கலைக்கழகத்தின் சுற்றுலா வீட்டினை விருத்தி செய்தல்.
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் பணியாளர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லத்தினை நிர்மாணித்தல் .