சம்பள முரண்பாடுகள் தொடர்பிலான  விசேட குழு இன்று(17) கூடுகிறது..

சம்பள முரண்பாடுகள் தொடர்பிலான விசேட குழு இன்று(17) கூடுகிறது..

அரச ​சேவையில் காணப்படும் சம்பள ஒழுங்கின்மை​யை சரி செய்தல், அரச சேவைக்குள் காணப்படும் ​சம்பளம் தொடர்பான முரண்பாடுகளை சீர் செய்தல் என்பவற்றுக்காக, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள 15 உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கூடவுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி முதற் தடவையாக ஒன்றுகூடியதுடன், இன்று 6ஆவது தடவையாக இந்த குழு ஒன்று கூடவுள்ளது.

இதேவேளை சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பான அபிப்ராயங்கள், யோசனைகளை பெற்றுத்தருமாறு, குறித்த குழுவானது தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இது குறித்தும் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், கடந்த 20ஆம் திகதியிலிருந்து இரண்டு மாதங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள இந்த குழு, சம்பள முரண்பாடு தொடர்பான யோசனைகளை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.