இங்கிலாந்தின் மிரட்டல் மிக்க வீரர் மற்றும் இலங்கையின் பலம் குறித்து சங்கா கருத்து…

இங்கிலாந்தின் மிரட்டல் மிக்க வீரர் மற்றும் இலங்கையின் பலம் குறித்து சங்கா கருத்து…

சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றுக்கு முகங்கொடுக்கக் கூடிய சகலதுறை வீரர்களைக் கொண்ட சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இலங்கைக்கு சவாலான தொடர் என இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் தலைவர் குமார் சங்கக்கார கிரிக் இன்போ இணையத்தளத்தின் ஊடான நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே இங்கிலாந்து (04) டெஸ்ட் தரவரிசையில் இலங்கையை (06) விடவும் முன்னிலையில் இருந்த போதிலும். அண்மையில் தென்னாபிரிக்கா அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரினை 2-0 என கணக்கில் இலங்கை அணி வெற்றி கொண்ட போதிலும் தர வரிசை குறித்து எதுவும் உத்தரவாதத்துடன் கூறமுடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“… நான் நினைக்கிறேன், சந்தேகமே இல்லை எச்சந்தர்ப்பத்தின் கீழும் சிறப்பாக விளையாடக் கூடிய உலகின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரர்களை கொண்ட வீரர்களே அவர்கள், அவர்களது பின்வரிசை வீரர்களிலும் இலக்கம் 10 வரையில் சகலதுறை வீரர்கள் இருக்கின்றனர், அவர்களுள் சிறந்த துடுப்பாட்ட திட்டம் ஒன்றுஉள்ளது, அவர்கள் மாற மாட்டார்கள்.. அவர்களில் எந்தவொரு ஓட்ட இலக்கிற்கும் துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர். எலஸ்டயார் குக் விக்கெட் இழந்த பின்பும், அவர்களுக்கு புதிய ஆரம்ப துடுப்பாட்ட திட்டமொன்று இருக்கும், ஆதலால் யாரு வந்தாலும் எதிர்கொள்வார்கள், இலங்கையினை இலக்கு வைக்கவும் முடியும்”

“அவர்களுல் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர், ஆதில் ரஷீத் மற்றும் மொயின் அலி போன்றோர்.. இலங்கையின் நிலைப்பாட்டில் ரஷீத் பாரிய மிரட்டலாக அமையும், அவர்களது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்றாக பந்தினை ஸ்விம் செய்து வீச முடியும்.. அவர்களுக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் மூவரை களத்தில் இறக்க வேண்டும் எனின், அவர்களுக்கு அதையும் செய்ய முடியும்.. வேகப்பந்து வீச்சாளர்கள் இன்றியும் அவர்களால் முடியும்..”

அவ்வாறே இலங்கை அணியில் ரங்கன ஹேரத் இனது பங்களிப்பு மற்றும் முதல் இன்னிங்சில் துடுப்பாட்ட வீரர்களது நடவடிக்கைகள் குறித்தும் சங்கக்கார கருத்துத் தெரிவித்திருந்தார்.

“இந்த போட்டிகளில் ரங்கன ஹேரத்தின் பாரிய பங்களிப்பு ஒன்றினை எதிர்பார்க்கிறோம், அவ்வாறே எமது துடுப்பாட்ட வீரர்களும் முதல் இன்னிங்சிலேயே கூடிய ஓட்டங்களை பெற வேண்டும்”