Update – கோத்தாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணத்திற்கான தடைக்கு தற்காலிக நீக்கம்..

Update – கோத்தாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணத்திற்கான தடைக்கு தற்காலிக நீக்கம்..

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத்திற்கான  தடை எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு தற்காலிகமாக நீக்கி  விசேட மேல் நீதிமன்றம் இன்று(09) உத்தரவு பிறப்பித்துள்ளது.

+++++++++++++++++++++ UPDATE

கோத்தாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர்  விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்..

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர்  விசேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

தங்காலை, வீரகெட்டிய, மெதமுலானையிலுள்ள டி.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியக நிர்மாணத்தில், ரூபா 33 மில்லியன் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழான 07 குற்றப் பத்திரிகைகளின் கீழ், கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி, சட்ட மாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலேயே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

குறித்த வழக்கின் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேர் கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி முதல் முறையாக மூவர் அடங்கிய விஷேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.