ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் ஈடுபட்டாலும் பரீட்சைகளுக்கு பாதிப்பு இல்லை…

ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் ஈடுபட்டாலும் பரீட்சைகளுக்கு பாதிப்பு இல்லை…

(FASTNEWS | COLOMBO) – 12ம் தர மாணவர்களுக்கு இன்று(13) ஆரம்பமாகிய சாதாரண தொழில்நுட்ப பரீட்சைக்கான (GIT) அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் எவ்வித தடைகளும் இன்றி பரீட்சை இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று(13) நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ள போதிலும் பரீட்சைகள் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் சேவைக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

655 பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை இடம்பெறுவதோடு, எதிர்வரும் 18ம் திகதி வரையில் பரீட்சைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.