ராஜித தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார் – மத்திய தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு அமைப்பு

ராஜித தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார் – மத்திய தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு அமைப்பு

பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவுகை வண்டி ஒன்று, அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் தேர்தல் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இவ்வாறு பயன்படுத்தப்பட்டதாக, மத்திய தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

களுத்துறையில் சுகாதார அதிகாரிகளுக்காக நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்காக இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

DW-0741 என்ற இலக்கத்தைக் கொண்டதும் PD-4435 என்ற இலக்கத்தைக் கொண்ட மற்றுமொரு கெப் ரக வாகனமும் தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தப்பட்டமையை தமது பணியாளர் அவதானித்தாகவும் அந்த அமைப்பின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அது எவ்வாறாயினும், குறித்த நோயாளர் காவுகை வண்டியில் வைத்தியசாலையின் தேவைக்காக களுத்துறை ஆதார வைத்திசாலைக்கு மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக, சிறிமாவோ பண்டாநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

(riz)