வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு – மோப்பநாய் சகிதம் சோதனை

வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு – மோப்பநாய் சகிதம் சோதனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு இருப்பதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸார் இன்று(11) தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை குறித்த தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு மோப்பநாய் சகிதம் வருகைதந்த வவுனியா பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதனால் வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள், பொதுமக்கள் சோதனை மேற்கொள்ளபட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)