கொழும்பு – ஹட்டன் வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்

கொழும்பு – ஹட்டன் வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு ஹட்டன் வீதியில் வட்டவளை, 62/3 கிலோமீற்றர் தூரம் அடையாளம் இடப்பட்ட இடத்திற்கு அருகாமையில் வீதி தாழிறங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக ஹட்டனை நோக்கி செல்வதற்கு சிறிய வாகனங்களுக்கு மாத்திரம் மற்றைய நிரலின் ஊடாக செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, கொழும்பை நோக்கி செல்லும் மற்றும் ஹட்டன் நோக்கி செல்லும் வாகன சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மாற்று வழியாக நோர்ட்டன் பிரீஜ் ,மஸ்கெலியா ஊடாக ஹட்டன் நோக்கி செல்ல முடியும் என்றும் தலவாக்கலை பூண்டுலோயா ஊடாக கண்டி சென்று கொழும்பு நோக்கி செல்ல முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.