ஊடகங்களை வாயடைக்க வைத்து மாலிங்கவுக்கு சங்காவினால் தர உத்தரவாதம்

ஊடகங்களை வாயடைக்க வைத்து மாலிங்கவுக்கு சங்காவினால் தர உத்தரவாதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குறுகிய கிரிக்கெட்டின் வெற்றி என்பது சீரான பந்து வீச்சாளர்களின் படையணியைக் கொண்டிருப்பதாகும் என இலங்கையின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான சுற்றுலா துறையினை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள The Hundred கிரிக்கெட் போட்டிகளுக்காக எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ள கிரிக்கெட் ஏலம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சங்கக்கார இது தொடர்பில் தெரிவித்திருந்தார்.

அவர் இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில், தனக்கு வீரர்களை தெரிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டால் முதலில் தெரிவு செய்வது பந்துவீச்சாளர்களையே என தெரிவித்துள்ளார்.

அதன்படி The Hundred வீரர்கள் ஏலத்தின் பெயர்ப்பட்டியலில் அதிகூடிய விலை மதிப்பு (பவுன் 125,000) கிடைக்கப் பெற்றுள்ள வீரரான இலங்கை அணியின் லசித் மாலிங்க, அவுஸ்திரேலிய அணியின் மிச்சேல் ஸ்டோக் மற்றும் தென்னாபிரிக்க அணியின் காகிசோ ரபாடா இடையே மாலிங்க மற்றும் ஸ்டோக் ஆகியோருக்கு தனது அதிக விருப்பம் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

” இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் அல்லது நூறு போட்டித் தொடரிலும், சமநிலையான, விசேட பந்து வீச்சில் தான் போட்டியின் வெற்றி தங்கியுள்ளது, அதற்கும் சிறந்த பந்து வீச்சாளரின் ஒத்துழைப்பு அவசியம்”

“நான் பொதுவாக பந்து வீச்சாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியே வருகிறேன் – லசித் மாலிங்க மற்றும் மிச்சேல் ஸ்டோக் ஆகியோர் அனுபவம் மற்றும் தரம் வாய்ந்தவர்கள்”

“அதிலும், நான் இன்னும் லசித் மாலிங்க பற்றி கூறப்போனால், நான் நினைக்கிறேன், மாலிங்க உண்மையிலேயே அண்மைக்காலமாக எவ்வளவு திறமையானவர் என்பதை நிரூபித்துக்காட்டிய வீரர் ஒருவராவார். கடைசியாக அவர் விளையாடிய இருபதுக்கு – 20 போட்டியிலும் நியூசிலாந்து அணியினை திண்டாடச் செய்து, மீளவும் நான்கு பந்துகளுக்கு 04 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். அது முடியாத காரியம் ஒன்றாகும்.. என்னால் மாலிங்கவை கடந்து செல்ல முடியாது..”