ஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்கள் மீது தாக்குதல்

ஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்கள் மீது தாக்குதல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈராக்கில் எரிபொருள் களஞ்சியங்களைக் குறிவைத்து ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த 4 பொலிஸார் உயிரிழந்தனர்.

ஈராக்கின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சலாடின் மாகாணத்தின் தலைநகரான டிர்கிட்டில் இருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அல்லாஸ் எரிபொருள் களஞ்சியத்தின் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கிருந்து ஒரு நாளைக்கு 20,000 பீப்பாய்கள் எரிபொருள் உற்பத்தி செய்யப்படுகின்றது. முக்கியமான அந்தப் பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பொலிஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் மழை மற்றும் சூறைக்காற்று உள்ளிட்ட அசாதாரண காலநிலையைப் பயன்படுத்தி நேற்று மாலை பொலிஸார் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

பொலிஸாரும் எதிர்த் தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்பு பயங்கரவாதிகள் பின்வாங்கினர். இந்தத் தாக்குதலில் 4 பொலிஸார் உயிரிழந்ததுடன் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.