உடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா? [PHOTOS]

உடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா? [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உடலுறவால் மாரடைப்பு ஏற்படுவது முன்பே அறிந்த ஒன்று. ஆனால், மாரடைப்புக்கும் உடலுறவுக்கும் உள்ள தொடர்பு முன்பு அறியாத ஒன்று.

வைத்தியர் சுமீத் மற்றும் கலிஃபோர்னியாவில் உள்ள அவருடைய குழுவுடன் இணைந்து , 2002 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் மாரடைப்புக்கு உள்ளான இளைஞர்களின் மருத்துவ பதிவுகளை ஆய்வு செய்தனர்.

Image result for உடலுறவினால் மாரடைப்பு

அதில், உடலுறவினால் ஏற்படும் மாரடைப்புகள் 1 சதவீதத்துக்கும் குறைவானதாக இருந்து இருக்கிறது. அப்படி மாரடைப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். அதுவும் குறிப்பாக நடுத்தர வயதுகாரர்கள், ஆஃப்ரிக்கர் – அமெரிக்கர்கள் மற்றும் முன்பே இதய நோய் உள்ளவர்கள்.

குறித்த கண்டுபிடிப்புகள் கார்டியோபல்மனரி ரிஸாசிடேஷன் சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு உணர்த்த பயன்படும்.” என தெரிவித்துள்ளார்.

Image result for உடலுறவினால் மாரடைப்பு

ஹார்ட் அட்டாக் அல்லது இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், குறைந்தது ஆறு வாரங்களுக்கு உடலுறவில் ஈடுப்படகூடாது என்று பிரிட்டிஷ் இதய அறக்கட்டளை வலியுறுத்துகிறது.

இதேவேளை, உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

துல்லியமாக 4557 மாரடைப்புகளை ஆராய்ந்ததில், 34 மட்டுமே உடலுறவின் போதும், உடலுறவுக்கு பிந்தைய ஒரு மணி நேரத்திலும் ஏற்பட்டு இருக்கிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் ஆண்கள்.