ஷாபி விவகாரம் – நாடகம் சஹ்ரானை நோக்கி திசை திரும்புகிறது

ஷாபி விவகாரம் – நாடகம் சஹ்ரானை நோக்கி திசை திரும்புகிறது

(ஃபாஸ்ட் நியூஸ் | குருநாகல்) – டாக்டர் ஷாபி (தொஸ்தர ஷாபி) இன்று இலங்கையில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது என்றே கூற வேண்டும். கடந்த ஏழு மாத காலமாக நாட்டின் பிர­தான பேசு பொருள்­களில் தவிர்க்­க­மு­டி­யாத ஒரு பெய­ராக அது மாறி­யி­ருக்­கின்­றது. காரணம், ஒரு ‘கருத்­தடை’ , வரு­மா­னத்தை மீறி சொத்து சேர்த்­த­தாக ஒரு குற்­றச்­சாட்டு. குற்­றச்­சாட்­டை­விட, கருத்­தடையினால் சாட்­சிகள் இன்­றியே ஷாபி டாக்டர் குற்­ற­வா­ளி­யாக்­கப்­பட்­டு­விட்டார்.

எப்­போதும் ஒருவர் தொடர்பில் விசா­ர­ணைகள் செய்து நியா­ய­மான சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் அவர் சந்­தேக நப­ராக அறி­விக்­க­ப்ப­டு­வதும், பின்னர் மேல­திக விசா­ர­ணை­களில் அல்­லது வழக்கு விசா­ர­ணை­களில் சாட்­சி­களின் அடிப்­ப­டையில் அவர் குற்­ற­வா­ளி­யாக அறி­விக்­க­ப்படு­வ­துமே நியா­ய­மான அல்­லது சட்­டத்தின் ஆட்சி இடம்­பெறும் ஒரு நாட்டின் வழ­மை­யாக இருக்க முடியும். எனினும், ஷாபி டாக்­டரின் விவ­கா­ரத்தில், அவர் சாட்­சி­க­ளின்றி குற்­ற­வா­ளி­யாக முழுத் தேசத்­துக்கும் அறி­விக்­கப்­பட்ட பின்­ன­ரேயே, அவ­ருக்கு எதி­ரான விசாரணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

ஷாபி டாக்­ட­ருக்கு எதி­ராக தற்­போது நியா­ய­மா­கவோ அநி­யா­ய­மா­கவோ இரு குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. ஒன்று, வரு­மா­னத்தை மீறி சொத்து சேர்த்­தமை. மற்­றை­யது, சிங்­களப் பெண்­க­ளுக்கு சட்­ட­வி­ரோ­த­மாகக் கருத்­தடை செய்­தமை.

கடந்த மே மாதம் 23 ஆம் திகதி வெளி­யான திவ­யின தேசிய பத்­தி­ரி­கையின் பிர­தான தலைப்பு செய்­தி­யா­னது, “சிசே­ரியன் சத்­திர சிகிச்­சை­களின் பின்னர் தெளஹீத் ஜமாஅத் டாக்­டரால் சிங்­கள பெளத்த தாய்மார் 4000 பேருக்கு குடும்பக் கட்­டுப்­பாடு” என வெளி­யா­கி­யி­ருந்­தது. இதுவே இந்த நாட­கத்தின் உத்­தி­யோ­க­பூர்வ டீச­ராக அமைந்­தது. உயர் பொலிஸ் அதி­காரி ஒரு­வரை மேற்­கோள்­காட்டி அந்த செய்தி வெளி­யி­டப்­பட்­டி­ருந்த போதும் அவ்­வ­தி­கா­ரியின் பெயர் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை.

எனினும், அந்த செய்தி வெளி­யா­ன­போதும், இலங்­கையில் எந்­த­வொரு பொலிஸ் நிலை­யத்­தி­னாலும், சிறப்பு விசா­ர­ணை­யா­ளர்­க­ளி­னாலும் அவ்­வாறு ஒரு விடயம் குறித்து எந்த விசா­ர­ணை­களும் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­க­வில்லை என்­பதை அன்­றைய தினமே பதில் பொலிஸ்மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன மற்றும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர ஆகியோர் உறுதி செய்திருந்தார்.

இவ்­வா­றி­ருக்­கையில் தான் திவ­யின செய்­தியை உறுதி செய்­வது போல அன்று மாலை ரஜ­ரட்ட பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் சன்ன ஜய­சு­மன, ஷாபி டாக்­டரின் புகைப்­ப­டத்தை பிர­சு­ரித்து தனது பேஸ்புக் சமூக வலைத்­த­ளத்தில், திவ­யின செய்தி சொல்லும் டாக்டர் இவர்தான் எனும் மாயையை ஏற்­ப­டுத்­தினர்.

இந்­நி­லையில் மீள செய்தி வெளி­யிட்ட திவ­யின பத்­தி­ரிகை, தனது செய்­தியை உறு­தி­செய்ய குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் சரத் வீர­பண்­டா­ர­வையும் மேற்­கோள்­காட்டி அறிக்­கை­யிட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் இந்தச் செய்தி பிரச்­சி­னை­யாக நாட­ளா­விய ரீதியில் இன­வாத சாய­லுடன் தீயாய் பர­வி­யது.

இந்­நி­லையில் திவ­யின பத்­தி­ரிகை செய்தி தொடர்பில், அந்த செய்­தியின் உண்­மைத்­தன்மை தொடர்பில் சி.ஐ.டி. ஊடாக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. அதன்­படி கடந்த மே 25 ஆம் திகதி குறித்த செய்­தியை எழு­திய ஊட­க­வி­ய­லா­ள­ரையும், அப்­பத்­தி­ரி­கையின் ஆசி­ரி­ய­ரையும் விசா­ரித்து சி.ஐ.டி. வாக்­கு­மூலம் பெற்­ற­துடன், செய்­தியை வெளி­யிட்ட உயர் பொலிஸ் அதி­காரி யார் என்­ப­தையும் வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டது. அதன்­படி குரு­நாகல் மாவட்­டத்­துக்குப் பொறுப்­பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்­சிரி ஜய­லத்­தையும் சி.ஐ.டி. விசா­ரித்­துள்­ளது.

கடந்த மே 25 ஆம் திக­தி­யன்று ஷாபி டாக்டர் அவரது வீட்டில் வைத்து குரு­நாகல் பொலி­சா­ரினால் கைது செய்­யப்­பட்டார். பொலிஸ் பேச்­சா­ளரின் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பின் பிர­காரம் அவர், வரு­மா­னத்தை மீறி சொத்து சேர்த்­தமை குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டார்.

விசாரணைகள் நீளாமாகிக் கொண்டே சென்றதி இனவாத சாயலும் பூசப்பட்டது. இந்நிலையில் பலத்த கேள்விகளுக்கு மத்தியில் குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் சிரேஷ்ட வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபிக்கு குரு­நாகல் நீதி­மன்றம் கடந்த ஜூலை 25ம் திகதி பிணை அளித்­தது. 250000 ருபாய் ரொக்கப் பிணை­யிலும் 2.5 மில்­லியன் பெறு­ம­தி­யான நான்கு சரீர பிணை­க­ளிலும் செல்ல அனு­ம­தித்த குரு­நா­கலை பிர­தான நீதவான் சம்பத் ஹேவா­வசம் பிணை­யா­ளர்­களை தமது வதி­வி­டத்தை உறுதி செய்­ய­வேண்டும் எனவும் ஒவ்­வொரு ஞாயிறு தினத்­திலும் முற்­பகல் 9 மணிக்கும் , நண்­பகல் 12 மணிக்கும் இடையே குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவில் ஆஜ­ராகி கையெ­ழுத்­திட வேண்டும் எனவும் உத்­த­ரவு பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் செப்டம்பர் 7ம் திகதியன்று நியமிக்கப்பட்ட புதிய ஆட்சியில் ஷாபியின் விசாரணைகளை மீளவும் ஆராயத் தொடங்கியது. குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை மீண்டும் புதிதாக ஆரம்பிக்கவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் விசாரணைகளின் போக்கு திசை திரும்புவதாகவும் ஒன்றுக்கு ஒன்று முற்றிலும் முரணானது எனவும் தெளிவாக புலனாகிறது எனலாம்.

அதற்கு சான்று பகரும் விதத்தில் குருணாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கில் நேற்று(16) பயங்கரவாதி சஹ்ரானின் பெயரால் பெரிதும் சர்ச்சை ஏற்பட்டதாக தெரிய வருகின்றது.

நேற்று(16) குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு நீதிவான் சம்பத் ஹேவாவசம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது கருத்தடை விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தாய்மார்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாணக , சந்தேக நபரான ஷாபியை லாபிர் எனும் நபரொருவருடன் தொடர்புபடுத்தி முன்வைத்த கருத்தால் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வழக்கின் ஆரம்பத்தில், இந்த சந்தேக நபர் (ஷாபி) லாபிர் என்னும் சந்தேக நபருடன் தோன்றும் புகைப்படத்துடன் கூடிய இறுவெட்டொன்று சி.ஐ.டி.யிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த லாபிர் எனும் நபர் பயங்கரவாதி சஹ்ரானுடன் சத்தியப்பிரமாணம் செய்தவர் என்றும் அது குறித்து எந்த விசாரணையும் இல்லை எனவும் அந்த பின்னணியில் பங்கரவாத தடைச் சட்டம் ஷாபி விடயத்தில் நீக்கப்பட்டுள்ளதாகவும் சாணக தெரிவித்துள்ளார்.

எனினும் இதற்கு வைத்தியர் ஷாபியின் சட்டதரணிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி நவரட்ன பண்டார இது கருத்தடை விவகாரம் குறித்த தாய்மார்களின் வழக்கு. பாதிக்கப்பட்டோர் தாய்மாரா? சஹ்ரானா? என கேள்வி எழுப்பினர்.

கடும் தொனியில் ஒரே நேரத்தில் இக்கருத்துக்கள் பரிமாறப்பட்ட நிலையில் மன்றில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் , நீதிவான் சிறிது நேரம் அமைதிகாத்து நிலைமையை சரி செய்ததாகவும் வழக்கினை எதிர்வரும் மார்ச் 14ம் திகதி மீள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.