ஓரினச்சேர்க்கை காணொளி தொடர்பில் ஹரீன் CIDக்கு

ஓரினச்சேர்க்கை காணொளி தொடர்பில் ஹரீன் CIDக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சமகி ஜன பலவேகய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ இன்றைய தினம் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவின் என கூறப்படும் ஓரினச்சேர்க்கை காணொளி ஒன்றினை சமூக வலைதளங்களில் பகிர்ந்தமை தொடர்பிலான முறைப்பாட்டுக்கு வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக அவர் மேலும் அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த முறைப்பாட்டினை காவிந்த ஜயவர்தன பதிவு செய்துள்ளார்.

குறித்த காணொளி தனக்கு முன்னாள் அமைச்சர்  ஹரீன் பெர்ணான்டோவினால் கிடைக்கப் பெற்றது என பிரபல பாடகரான இராஜ் வீரரத்ன, பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.