வைத்தியர் ஷாபியை வைத்து அரசியல் காய் நகர்த்தல்கள் – உண்மை இதுதான்

வைத்தியர் ஷாபியை வைத்து அரசியல் காய் நகர்த்தல்கள் – உண்மை இதுதான்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியாக சுகாதார நடைமுறைகளை முன்னெடுத்து எவ்வாறு தேர்தலை நடத்துவது என ஒத்திகை தேர்தல்களும் இடம்பெற்று வருகின்றது.

தேர்தல் சூட்டுடன் வேட்பாளர்களை முன்னிலைப்படுத்தும் கட்சி மற்றும் அவர்களுக்கான ஆதரவு பிரசுரங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருவது சாதாரணமானதொன்று. இதிலும் கட்சிகளை சேறு பூசும் வகையிலும் குறிப்பிட்ட சில நபர்களை சேறு பூசும் வகையிலும் பிழையான பிரசுரங்களும் சமூக வலைதளங்களில் பரிமாறப்படுகின்றன.

C:\Users\Prabuddha Athukorala\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.Word\screenshot-www.facebook.com-2020.06.15-09_08_34.png

அதன்படி, அண்மைய ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் அதிகம் கதைக்கப்பட்ட பேசு பொருளான வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன், இம்முறை பொதுத் தேர்தலில் இல.18 இன் கீழ் சமகி ஜன பலவேகய ஊடாக போட்டியிடுவதாக முகநூல் ஊடாக மற்றும் சமூக வலைதளங்கள் ஊடாக குறுகிய காலப்பகுதியில் வைரலாகி வருகின்றது. குறிப்பாக குறித்த பிரசுரங்களில் “நாட்டின் சிங்கள குழந்தைகளை அழித்த இழிவானவன் சஜித் உடன்…” எனும் தொனியிலான சில பிரசுரங்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.

மேலும் தேசிய மக்கள் கட்சியின் ஊடாக வைத்தியர் ஷாபி அம்பாறை மாவட்டத்தினூடாக போட்டியிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட விருப்பு எண் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தலில் குறித்த பேசுபொருளான முன்னர் குருநாகல் வைத்தியசாலையில் வேலை செய்த குருநாகல் மாவட்ட சமகி ஜன பலவேகய வேட்பாளர் பட்டியலை பரிசீலித்ததில் அதில் இலக்கம் 18 இல் “விபுல மஹவிதானகே குணரத்ன” போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தவிர சமகி ஜன பலவேகய கட்சியின் கீழ், இல.18 கீழ் வேறு மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பில் அலசிப் பார்த்ததில் அவ்வாறு இல.18 இல் குருநாகல் மாவட்டம் தவிர்ந்த கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முறையே சுமித் எரந்திக மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் போட்டியிடுவது உறுதியானது.

மற்றுமொரு பதிவில் குறிப்பிடப்படும் புகைப்படத்தில் இருப்பவர் வைத்தியர் ஷாபி இல்லை என்பதோடு, திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி ஊடாக இல.08 இல் போட்டியிடும் “ஏ.எஸ்.எம்.புஹாரி” என்பவர் என்பதோடு, அவர் முன்னாள் தபால் அதிகாரி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.