ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு எதிராக வழக்குத் தொடர்வேன் – கம்மன்பில

ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு எதிராக வழக்குத் தொடர்வேன் – கம்மன்பில

அரசியலமைப்பு பேரவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்தின் நியமனத்தை இரத்து செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.

அக்குறித்த நியமனத்தை இரத்து செய்யாவிடின், அந்த நியமனத்தை எதிர்த்து ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வேன்; எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை நீக்கி, ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை விருப்பத்தின் அடிப்படையில், பிரதிநிதியொருவரை அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கவேண்டும் என்றும் அவர் மேலும் கோரியுள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதான காரியாலயத்தில் நேற்று(௦1) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

(riz)