மஹர சிறைச்சாலை கலவரம் : விமலுக்கு ஆப்பு

மஹர சிறைச்சாலை கலவரம் : விமலுக்கு ஆப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும்படி வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹர சிறை கலவரம் குறித்த வழக்கு விசாரணை வத்தளை நீதவான் நீதிமன்றில் நேற்று நடந்தது.
குறித்த கலவரம் குறித்து பாராளுமன்றத்திலும், பொது இடங்களிலும் மேற்படி இரண்டு அமைச்சர்களும் பகிரங்கத் தகவல்களை வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக கைதிகள் ரிவர்ஸ் என்கிற இரத்தத்தை காணும்படிக்கு வெறித்தனம் ஏற்படுகின்ற மாத்திரைகளை உட்கொண்டபடியினால்தான் கலவரத்தில் ஈடுபட்டதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த கருத்து தொடர்பாக நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து, குறித்த இருவரிடமும் விசாரணை நடத்தும்படியான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோரிடம் விரைவில் வாக்குமூலத்தைப் பதிவுசெய்து அதனை அறிக்கையாக வருகின்ற 8ஆம் திகதி சமர்பிக்கும்படி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.

மேலும், மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கையிலுள்ள விடயங்களை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.