சீரம் நிறுவன தடுப்பூசிகளில் தாமதம்

 சீரம் நிறுவன தடுப்பூசிகளில் தாமதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் முன்பதிவு செய்யப்பட்டுள்ள 5 மில்லியன் கொவிஷீல்ட் தடுப்பூசிகளில் 10 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டுக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்த்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

.. சீரம் நிறுவனத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மத்தியில் இலங்கை மாத்திரமன்றி ஏனைய நாடுகளுக்குமான தடுப்பூசி விநியோக நடவடிக்கையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது..

எனவே இந்த மாத இறுதியில் கிடைக்கப்பெறவிருந்த குறித்த தடுப்பூசி தொகை ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் நாட்டிற்கு கிடைக்ககூடும் என எதிர்பார்கிறோம்..” என பதில் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.