ஜனக பண்டார மீது இன்னும் இரண்டு கொலை குற்றச்சாட்டுகள்

ஜனக பண்டார மீது இன்னும் இரண்டு கொலை குற்றச்சாட்டுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டாரவுக்கு எதிராக மேலும் இரண்டு கொலை குற்றச்சாட்டுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வு பிரிவினரால், நபர் ஒருவரை கொலை செய்த குற்றச் சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு இதுவரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தம்புள்ளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக மேலும் இரண்டு நபர் கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மாத்தளை, பல்லேபொல பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ரஞ்சித் அலுவிஹாரவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் சமிந்த டயஸ் என்பவர் அவ்விடத்திலே உயிரிழந்துள்ளார்.

இக் கொலைகள் இரண்டு தொடர்பில் அக்காலப்பகுதியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தீர்த்துக்கொள்ளப்பட்டாலும்,

உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதனால் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்து உண்மை சம்பவத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு பிரிவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகின லக்ஷ்மன் துல்வல என்பவர் ஆறு மாதங்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேலையில் உயிரிழந்துள்ளார்.

ரகசிய பொலிஸார் இதுவரையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் பல தகவல்கள் சேகரித்துள்ளனர்.

விசாரணைகளின் இறுதியில் ஜனக பண்டார தென்னகோன் உட்பட குழுவினரிடம் வாக்குமூலம் ஒன்று பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(riz)