விஜய் 65ஆவது படத்தில் இரட்டை நாயகிகள்

விஜய் 65ஆவது படத்தில் இரட்டை நாயகிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்திய) – மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 65ஆவது படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் ரஷ்யாவில் நடைபெற உள்ளது. மேலும், இப்படத்தில் பூஜா ஹெக்டேதான் நாயகியாக நடிக்கிறார் என்கிற செய்திகள் ஏற்கனவே வெளியாகி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்புதான் அந்த செய்தியை தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியது.

இந்த நேரத்தில், விஜய் 65ஆவது படத்தில் இன்னொரு நாயகியும் இருப்பதாக புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புதிய நாயகி ராஷ்மிகா மந்தனாவாக இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் விஜய் சேதுபதியின் கருப்பன் உள்பட சில படங்களில் நடித்துள்ள தன்யா ரவிச்சந்திரனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

COMMENTS

Wordpress (0)