எரிபொருள் பெற்றுக்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு

எரிபொருள் பெற்றுக்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் பெற்றுக்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

எரிபொருளை பெற்றுக்கொள்ளும்போது ஆயிரம், இரண்டாயிரம் ரூபா என்ற அடிப்படையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனா்.

மோட்டாா் சைக்கிளுக்கு அதிகபட்சம் ஆயிரம் ரூபா, கார் மற்றும் பஸ் ஆகிய வாகனங்களுகு்கு அதிபட்சம் இரண்டாயிரம் ரூபா என்ற அடிப்படையில் எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரிசையில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள செல்லும்போது இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது பாரிய அசௌகரியத்தை எதிர்கொள்வதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனா்.