பிரதமர் ஆடையின்றி செல்ல வேண்டிய நிலை வெகுவிரைவில் – ஞானசார தேரர்

பிரதமர் ஆடையின்றி செல்ல வேண்டிய நிலை வெகுவிரைவில் – ஞானசார தேரர்

இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பு ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் நாட்டு மக்களின் கருத்துகளை அறிந்து கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆணைக்குழுவிற்கு பொதுபல சேனா அமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நேற்று(29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அரசியல் யாப்பை உருவாக்குவதற்கு இடமளிக்கப்போவது இல்லை எனவும், அந்த யாப்பிற்கு தீவைக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது விருப்பத்திற்கு அரசியல் யாப்பினை மாற்றுவதற்கு பிரதமருக்கு முடியாது எனவும், அவ்வாறு முயலும் பட்சத்தில் அவர், ஆடையின்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

(riz)