தலைமைப் பதவியிலிருந்து விலகினார் ஹஷிம் அம்லா.

தலைமைப் பதவியிலிருந்து விலகினார் ஹஷிம் அம்லா.

தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஹசிம் அம்லா விலகியுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

4 போட்டிகள் கொண்ட் இந்த தொடரில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து 241 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக இந்தியாவுக்கு எதிரான தொடரையும் தென்ஆப்பிரிக்க அணி இழந்தது.

இதனால் தென்ஆப்பிரிக்க அணியின் தலைவராக செயல்பட்டு வந்த அம்லா மீது விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் கேப் டவுனில் நடந்த 2வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 629 ஓட்டங்கள் குவித்து மிரட்டியது.

இதனால் தென்ஆப்பிரிக்கா அணி இந்த போட்டியிலும் தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் பின்னர் அம்லா அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.

இதனால் அந்த அணி 627 ஓட்டங்கள் குவித்து தோல்வியில் இருந்து தப்பியது. இதனால் 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

போட்டி டிராவில் முடிந்த உடனே தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஹசிம் ஆம்லா அறிவித்துள்ளார்.

ஸ்மித் தலைவர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து 2014ம் ஆண்டின் இருந்து அம்லா அந்த பொறுப்பில் இருந்து வந்தார்.

டிவில்லியர்ஸ் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு தலைவராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

(riz)