தீவிரவாதத்திற்கு அமெரிக்கா உரமிடுகின்றது – பாகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு

தீவிரவாதத்திற்கு அமெரிக்கா உரமிடுகின்றது – பாகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு

அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்குவதாக அமெரிக்க நாடளுமன்றத்தில் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அமெரிக்கா பாராளுமன்றத்தில் பேசிய ஒபாமா பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடமாக இருந்து வருகின்றது. பாகிஸ்தானில் நிலையற்ற தன்மை நீண்டகாலத்துக்கு நீடிக்கும் என குறிப்பிட்டிருந்தார். ஒபாமாவின் இந்த கருத்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பெரும் பிரச்சனையாக வெடித்தது.

இந்தக் குறித்த விவகாரம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்பு தீர்மானத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாக் அஜிஸ் ஆப்கானிஸ்தான் விடுதலை போரின் போது அங்கு புனிதப் போராளிகள் என்ற பெயரில் ஜிஹாதிகளை உருவாக்கிவிட்டது தான் பாகிஸ்தானில் நிலவிவரும் நிலையற்ற தன்மைக்கு மூலக்காரணம் என கூறினார்.

ஒபாமாவின் இந்த கருத்துக்கு பாகிஸ்தானின் ஜனநாயகத்தை பலப்படுத்துவதின் மூலம் நாம் பதிலளிக்க வேண்டும் என சர்தாக் அஜிஸ் மேலும் கூறினார்.