விண்வெளியில் சிக்கிய பீலே ட்விட்டர் மூலம் தகவல்

விண்வெளியில் சிக்கிய பீலே ட்விட்டர் மூலம் தகவல்

விண்வெளியில் ‘‘காமெட் 67 பி’’ என்ற பிரமாண்டமான வால் நடசத்திரம் உள்ளது. இந்த வால் நட்சத்திரத்தை ஆராய ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி ஆய்வுக் கழகம் முடிவு செய்தது.

கடந்த ஆண்டு ரோசிட்டா என்ற விண்கலத்தை ஐரோப்பிய விஞ்ஞானிகள் அந்த வால் நட்சத்திரம் நோக்கி ஏவினார்கள். அந்த விண்கலத்தில் பீலே என்ற விண்வெளி வீரர் சென்றார்.

முழுவதும் சூரிய சக்தியால் இயங்கும் ரோசிட்டா விண்கலம் வெற்றிகரமாக வால் நட்சத்திரத்தை சென்றடைந்தது. இதன் மூலம் காமெட் 67 பி வால்நட்சத்திரத்தில் தரை இறங்கிய முதல் வீரர் என்ற பெருமையை பீலே பெற்றார்.

ஆனால் வால் நட்சத்திரத்தில் அவர் தரை இறங்கிய சில நிமிடங்களில் அவரது தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சூரியனில் இருந்து நீண்ட தொலைவுக்கு சென்று விட்டதால் எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக ஐரோப்பிய விஞ்ஞானிகள் கருதினார்கள். இதனால் விண்வெளி வீரர் பீலே கதி என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது.

கடந்த 6 மாதமாக அவரிடம் தொடர்பு கொள்ள ஐரோக்கிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று விண்வெளி வீரர் பீலேயிடம் இருந்து தகவல் வந்துள்ளது.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வணக்கம் பூமியே, நான் பேசுவது கேட்கிறதா?’’ என்று தகவல் அனுப்பியுள்ளார். அவருக்கு ஐரோப்பிய விஞ்ஞானிகள் பதில் அனுப்பியுள்ளனர்.

அவரிடம் மீண்டும் தகவல் தொடர்பு ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. தகவல் தொடர்பை ஏற்படுத்தி விட்டால் பீலேயை உயிருடன் மீட்டு விட முடியும் என்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.