டோனியின் வாழ்க்கை வரலாற்றுப்படம் இன்று வெளியாகிறது – பாகிஸ்தானில் தடை..

டோனியின் வாழ்க்கை வரலாற்றுப்படம் இன்று வெளியாகிறது – பாகிஸ்தானில் தடை..

இந்திய பிரபல கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாற்று படம் இன்று உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை தலைவரான டோனியின் வாழ்க்கை படமான “எம்.எஸ். டோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி” என்ற படம் 60 நாடுகளில் 4 ஆயிரத்து 500 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஆனால் டோனி படத்தை திரையிட பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா 7 தீவிரவாத முகாம்களை அழித்தது.

இதற்காகவே டோனி படம் பாகிஸ்தானில் தடைவிதிக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், சென்சார் போர்டு சான்றிதழ் அளிக்கவில்லை என்று புதுக்கதை கூறியுள்ளது பாகிஸ்தான்.

எனினும் வெளியாகியுள்ள மற்ற நாடுகளில் டோனியின் வாழ்க்கைப் படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=6L6XqWoS8tw” width=”560″ height=”315″]